Friday, June 29, 2012

                                இருந்தவனின் கேள்வி


அநேகமாய்
ஒவவொரு இறந்தவனையும்
அங்கிருந்த எவனோ
அல்லது
அவன் கூட இருந்த எவனோ
தவறாமல் கேட்கும் கேள்வி
"என்னப்பா இப்படி பண்ணிட்டு போய்ட்டே "  
என்பதே .

இறந்தவன் பின்னே
பிறந்ததா  வந்து
பதில் சொல்ல முடியும்!
இல்லை,
மறந்து எழத்தான் முடியுமா ..
இறந்தது என்ப்து
போனது அல்ல.
இறந்து இருப்பது ..

"உறங்குவ்து போலவும்   சாக்காடு"
என்ற வள்ளுவர்
"உறங்கி விழிப்பதுவும் போலவும்
பிறப்பு"
என்றும்  சொன்னார்
பிறவிகளை இணைத்த
பிதாமகன் .

'இறப்பது என்பதும் பிறப்பதே'

பிறவிகளை இணைப்பது பிறப்பு
எனின்
இருந்தவனின் கேள்விக்கான
பதில்
பிறந்தவன், பிறந்து அவன் சொல்வது எப்போது ?
கேட்டவன்
இருந்தும்
கேட்க முடியாது ..
இறந்தும் ....முடியாது...

Sunday, March 4, 2012

kanavu

                                               கனவு...

கனவு...
காண்பதற்காகவே ..
நான் கொள்ளும் உறக்கம்
மிக விருப்பமானது

ஏதோ இஷ்டமான உணர்வுடன்
இயல்பாக கிடைத்துவிட்ட
சந்தர்ப்பமானது
அந்த உறக்கங்கள்

வரும்.,என்று விரும்பி
உறங்கச் செல்ல ..

மனதில் இடம்பிடித்து
நிலவமைத்து ..

எங்கே அது?
என்று பார்த்தால்..

என்ன தேடுகிறாய்
என்றது அது .

உறங்கும்போது
நான் உன்னை
தேடுகிறேன் ..
என்றேன் .

நீ தேடும்போது வர
நான் என்ன கனவா ?
நீ மறக்கும்போது
உன்னை வந்தெழுப்பும்
நான்!
உன் நினைவு
என்றது.

கனவுக்கும்
கனவுக்குள் நினைவிற்கும்
கதவமைத்து ..
திறந்து
கதவடைத்து ..
திறந்து
கண்ணின் விழிவரை
வந்து இமைகளை பிடித்து
தொங்கிக்க்கொண்டிருந்த
அதை
திறந்து பார்த்தேன்
நிஜமாகவே
அது கனவு......வு......