Monday, March 25, 2013


                                                      சிப்ஸ்

ஸாப்ட்வேர் என்ஜினியர் வாழ்க்கை 

"நெட் திரை அல்லது
நித்திரை "

வீட்டு லோன்

"கட்டும் வரை லோன்
முடியாதபோது சிலோன்"

ஆவின் பால் விலை உயர்வு

"அன்று - அம்மா குடுத்தது தாய்பால்
இன்று - அம்மாவாலும் கொடுக்க முடியாதது ஆவின்பால்"

மின் கட்டண உயர்வு

"சோக் என்பது டியூப் லைட்டுக்கு போடுவது
ஷாக் என்பது லைட் பில்லால் கிடைப்பது"

பெயில் அவுட்

இன்றைய சாப்பாட்டுக்கு      

Friday, June 29, 2012

                                இருந்தவனின் கேள்வி


அநேகமாய்
ஒவவொரு இறந்தவனையும்
அங்கிருந்த எவனோ
அல்லது
அவன் கூட இருந்த எவனோ
தவறாமல் கேட்கும் கேள்வி
"என்னப்பா இப்படி பண்ணிட்டு போய்ட்டே "  
என்பதே .

இறந்தவன் பின்னே
பிறந்ததா  வந்து
பதில் சொல்ல முடியும்!
இல்லை,
மறந்து எழத்தான் முடியுமா ..
இறந்தது என்ப்து
போனது அல்ல.
இறந்து இருப்பது ..

"உறங்குவ்து போலவும்   சாக்காடு"
என்ற வள்ளுவர்
"உறங்கி விழிப்பதுவும் போலவும்
பிறப்பு"
என்றும்  சொன்னார்
பிறவிகளை இணைத்த
பிதாமகன் .

'இறப்பது என்பதும் பிறப்பதே'

பிறவிகளை இணைப்பது பிறப்பு
எனின்
இருந்தவனின் கேள்விக்கான
பதில்
பிறந்தவன், பிறந்து அவன் சொல்வது எப்போது ?
கேட்டவன்
இருந்தும்
கேட்க முடியாது ..
இறந்தும் ....முடியாது...

Sunday, March 4, 2012

kanavu

                                               கனவு...

கனவு...
காண்பதற்காகவே ..
நான் கொள்ளும் உறக்கம்
மிக விருப்பமானது

ஏதோ இஷ்டமான உணர்வுடன்
இயல்பாக கிடைத்துவிட்ட
சந்தர்ப்பமானது
அந்த உறக்கங்கள்

வரும்.,என்று விரும்பி
உறங்கச் செல்ல ..

மனதில் இடம்பிடித்து
நிலவமைத்து ..

எங்கே அது?
என்று பார்த்தால்..

என்ன தேடுகிறாய்
என்றது அது .

உறங்கும்போது
நான் உன்னை
தேடுகிறேன் ..
என்றேன் .

நீ தேடும்போது வர
நான் என்ன கனவா ?
நீ மறக்கும்போது
உன்னை வந்தெழுப்பும்
நான்!
உன் நினைவு
என்றது.

கனவுக்கும்
கனவுக்குள் நினைவிற்கும்
கதவமைத்து ..
திறந்து
கதவடைத்து ..
திறந்து
கண்ணின் விழிவரை
வந்து இமைகளை பிடித்து
தொங்கிக்க்கொண்டிருந்த
அதை
திறந்து பார்த்தேன்
நிஜமாகவே
அது கனவு......வு......

  

Friday, December 16, 2011

              வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு பாட்டி



கையில் வாங்கிய பணத்தை
சுருட்டி.. சுருட்டி..
பத்திரமாய்
சுருங்கிய கைக்குள்
இருத்த்திக் கொண்ட பாட்டி
தயங்கி தயங்கி
கேட்டே விட்டாள்
வீட்டு பெரியராகிவிட்ட
பெரிய மகனிடம்.
"ஏம்ப்பா இந்த வருஷமாவது ..
வீட்டுக்கு வெள்ளை அடிச்சிடலாமாப்பா.."
என்று

"இதே கேள்விதானா.."
எப்போ பணம் குடுக்க வந்தாலும்!
என்று
வேகமாய் வெளியேறிய மகனை
"கொஞ்சம் காப்பியாவது குடிச்சிட்டு போப்பா"
என்றவள்...

ஆறு மாதம் கழித்து
அடுத்த மகனிடம்
"அந்த முன் கட்டுக்கு மட்டுமாவது ..
வெள்ளை அடிச்சிட்டா ..
ஊருக்கு கௌரவமா போய்டும் .."
சொல்லுப்பா என்னன்னு
என்றாள்.

அரை மணி இருக்கத்தான்... நினைத்து
அவசரமாய் பறந்து விட்ட
மகனை பார்த்தபடியசொன்னாள்
"பாத்து பத்தரமா வண்டி எடுத்துட்டு போப்பா"
என்று.

"வீட்டு முன் பக்கம் சுவர் மட்டும்
கொஞ்சம் பாத்து விடட்ட கூட ..
போதும்.."
என்னப்பா சொல்றீங்க எல்லாரும்?
"அப்பா தெவசம் வருதுப்பா"
.என்றாள்.

வீடு  கட்டி வச்சிருந்தா பரவாயில்லே ..
இரும்பு கோட்டையில்ல
கட்டி வச்சிருக்காரு.
சம்பளத்துக்கு ஆளா
நாங்க ஒன்பது பேரு இருக்கோம்
"தெவசம் பண்ண பணமில்லை"
என்றவர்களிடம் ..

வேண்டாமப்பா
அப்பா தெவசமே  பண்ணிடலாம்
வீட்ட அப்புறமா பாத்துக்கலாம்...
என்றே சென்றாள்.

இன்று..
வெள்ளையடிக்கப்பட்டு
விழா   கோலம்
பூண்டு இருந்தது
பாட்டி வீடு...
பாட்டி போன பிறகு;
வீட்டை வாங்கிய
வேறு ஒருவரால் .

    
    ..    

Monday, November 21, 2011

                                            பிடிக்குதா குழந்தைகளே.


புத்தகங்களே!
கிழித்துவிடதீர்கள்!...
அவை குழந்தைகள்...  

Saturday, August 21, 2010

                                              வேட்கை


வெயிலை இரவில் மாட்டி வைத்து
வயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டு
வௌவால் போல ஒட்டிக்கொண்டு
வாயை காதில் ஒட்டிக்கொண்டு
பாதி வெந்து தின்று  விட்டு
மீதிக்கு புகையை மென்று போட்டு
காலை கையாய் ஆக்கிக்கொண்டு
காலை கையாய்  மாற்றிக்கொண்டு
பாய்ந்து பாய்ந்து ஓடி
பறந்து பறந்து தேடி
வாழ்கையின் அர்த்தம்
பொருள் சேர்க்கைத்தானோ!

காத்திருந்த மனைவிக்கு \ கணவனுக்கு
கொட்டாவி தந்து
பார்த்திருந்த பிள்ளைக்கு
பாதி முத்தம் தந்து
கண்களில் மறுகாலையை
ஒட்டிக்கொண்டு
வாழ்க்கையின் அர்த்தம்
பொருள் வேட்கைதானோ
வெயிலும் நிலவும்
வருவதும் ஏனோ !

Sunday, August 15, 2010

                                       ஊர் மாற்றல்


வேர் பிடிக்கும் நேரம்
வெடுக்கென பிடுங்க வரும்
ஊர் மாற்றல் உத்தரவுகள்.

ஊர் பார்க்கும் ஆசையோ
உலகம் பார்க்கும் ஆசையோ
இன்றி
புது வீட்டிற்குள்
புலம் பெயரும்
தனிமைகள்..

பிடிக்காத ஊரிலும்
பிடித்து விட்ட
நண்பனைப் போல
வந்து விடும்
ஒரு மழை.