வீட்டுக்கு வெள்ளை அடிச்சாச்சு பாட்டி
கையில் வாங்கிய பணத்தை
சுருட்டி.. சுருட்டி..
பத்திரமாய்
சுருங்கிய கைக்குள்
இருத்த்திக் கொண்ட பாட்டி
தயங்கி தயங்கி
கேட்டே விட்டாள்
வீட்டு பெரியராகிவிட்ட
பெரிய மகனிடம்.
"ஏம்ப்பா இந்த வருஷமாவது ..
வீட்டுக்கு வெள்ளை அடிச்சிடலாமாப்பா.."
என்று
"இதே கேள்விதானா.."
எப்போ பணம் குடுக்க வந்தாலும்!
என்று
வேகமாய் வெளியேறிய மகனை
"கொஞ்சம் காப்பியாவது குடிச்சிட்டு போப்பா"
என்றவள்...
ஆறு மாதம் கழித்து
அடுத்த மகனிடம்
"அந்த முன் கட்டுக்கு மட்டுமாவது ..
வெள்ளை அடிச்சிட்டா ..
ஊருக்கு கௌரவமா போய்டும் .."
சொல்லுப்பா என்னன்னு
என்றாள்.
அரை மணி இருக்கத்தான்... நினைத்து
அவசரமாய் பறந்து விட்ட
மகனை பார்த்தபடியசொன்னாள்
"பாத்து பத்தரமா வண்டி எடுத்துட்டு போப்பா"
என்று.
"வீட்டு முன் பக்கம் சுவர் மட்டும்
கொஞ்சம் பாத்து விடட்ட கூட ..
போதும்.."
என்னப்பா சொல்றீங்க எல்லாரும்?
"அப்பா தெவசம் வருதுப்பா"
.என்றாள்.
வீடு கட்டி வச்சிருந்தா பரவாயில்லே ..
இரும்பு கோட்டையில்ல
கட்டி வச்சிருக்காரு.
சம்பளத்துக்கு ஆளா
நாங்க ஒன்பது பேரு இருக்கோம்
"தெவசம் பண்ண பணமில்லை"
என்றவர்களிடம் ..
வேண்டாமப்பா
அப்பா தெவசமே பண்ணிடலாம்
வீட்ட அப்புறமா பாத்துக்கலாம்...
என்றே சென்றாள்.
இன்று..
வெள்ளையடிக்கப்பட்டு
விழா கோலம்
பூண்டு இருந்தது
பாட்டி வீடு...
பாட்டி போன பிறகு;
வீட்டை வாங்கிய
வேறு ஒருவரால் .
..
No comments:
Post a Comment